பிரியாவிடை - The Warrior's Farewell
Hello readers, here is a poem composed and penned by me in Tamil. Do read and comment your valuable feedback about the same. Have a great day! சுழலுகின்ற உலகிலே, இழந்த உந்தன் நினைவிலே, உயிர்க மறுக்கும் உடலிலே, உறங்கும் வீரன் எழுகவே! வலிகள் மறைத்த சிரிப்பிலே, சுமைகள் தாங்கும் தோளிலே, வேதனைகள் கடந்து சென்று, சொர்க்கம் உன்னை ஏற்கவே! கலங்காதே வீரனே, போகாதே தூரமே, உனக்காக போரிலே, போராடும் கரங்களே! பாடாத பாடலே , உன் சாவின் கீதமே , என் நெஞ்சம் தாங்காதே, உன்போல யாருமில்லையே! இருளின் வெளிச்சம் நீயே இதய உறுதி நீயே உனது விழியின் தீயே எனது கவிதை வரியே, பிரியாவிடை கொடுத்தாய் வீரனே! - சாய் சக்திவேல் ராஜாமணி சுரேந்திரன்